LOADING

Type to search

உலக அரசியல்

‘சக்தி வாய்ந்த நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்லுறவு உள்ளதென’ நெதன்யாகு பேசினார்

Share

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் ‘சக்தி வாய்ந்த நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்லுறவு உள்ளதென’ பிரதமர் நெதன்யாகு பேசினார். 

அவர் பேசும்போது கூறியதாவது: “அமெரிக்காவில் இன்னும் 2 ஆண்டுகளில் புதிய அதிபர் வருவார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக இருப்பார். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்? அமெரிக்காவுடன் எப்படி நல்லுறவை பேணுவீர்கள்? அதை தாண்டி இவற்றுக்கு என்ன தீர்வு தேவை? அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த 2 ஆண்டு காலத்தை நாம் நன்றாக பயன்படுத்தி கொண்டு நம்மை நாம் பலப்படுத்தி கொள்ள வேண்டும். நாம் அடுத்த கூட்டணியை தொடங்க வேண்டும். அந்த விஷயத்தில்தான் நான் தற்போது பணியாற்றி வருகிறேன். அதாவது பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து செயலாற்றி வருகிறேன். இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல. இன்னும் பல்வேறு நாடுகள் உள்ளன. அடுத்த சில நாட்களில் பிரேசிலில் மாற்றம் நிகழ உள்ளது. பிற நாடுகளுடனான நமது கூட்டணியை விஸ்தரிக்க வேண்டும். அதே நேரத்தில் மற்ற நாடுகள் மதிக்கும் அளவுக்கு நமது பலத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு சிறப்பு வாய்ந்த நல்லுறவு உள்ளது. அதனால் நாம் சர்வதேச அளவில் தனித்து விடப்படவில்லை. இஸ்ரேல் மீது இந்திய மக்களுக்கு தனி அன்பு உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.