வலி. கிழக்கு பிரதேச சபையில் பக்திபூர்வமாக இடம்பெற்ற விஜயதசமி பூசையும் ஏடுதொடக்கமும்
Share
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நவராத்திரி விஜயதசமி பூசையும் பிரதேச சபைக்குச் சொந்தமான கோப்பாய் சிகரம் முன்பள்ளியின் நவராத்திரி விழாவும் ஏடுதொடக்குதல் நிகழ்வும் 20ம் திகதி அன்று செவ்வாய்கிழமை காலை சிறப்புற நடைபெற்றன.
காலை முன்பள்ளியின் விஜயதசமி பூசை வழிபாடுகள் மாணவர்கள்இ பெற்றோர்இ ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், செயலாளர், தவிசாளர் ஆகியோரின் பங்கேற்புடன் பக்தியுடன் இருபாலையில் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் புதிதாக கல்வியை ஆரம்பிக்கின்ற சிறார்களுக்கான ஏடுதொடக்குதல் நிகழ்வு இடம்பெற்றது. புதிதாக கல்வியை ஆரம்பிக்கின்ற மாணவர்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் சிறார்களுக்கு ஏடுதொடக்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்கேற்ற மாணவர்களுக்கு பரில்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மதியம் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் விஜயதசமி பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றன. இந் நிகழ்வுகளிலும் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், செயலாளர் இராமலிங்கம் பகிரதன், உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










