LOADING

Type to search

இலங்கை அரசியல்

அநுர அரசின் தற்போதைய ‘அசுர’ நடவடிக்கைகள் சில மக்களை வியப்பில் ஆழத்தும் ஆச்சரியம்!

Share

திருகோணமலையில் 200ம் ஆண்டு இரு தமிழ்ப் பெண்களை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 9 கடற்படையினர் கைது செய்து விளக்கமறியல்

(கனகராஜா சரவணன்)

திருகோணமலை,பாலையூற்று பகுதியில் வைத்து கடந்த 2008ஆம் இரண்டு பெண்களை வெள்ளை வேனில் கடத்தி சென்று, திருகோணமலை கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், கொழும்பில் வைத்து கடந்த 19ம் திகதி திங்கட்கிழமை (19) சிஜடி யினரால் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் 3 பேரையும் எதிர்வரும் 28 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன், 20ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை 20) உத்தரவிட்டுள்ளது விசாரணைகள் மிகவும் வேகமாக நடைபெறும் என்றும் உறுதியளித்தார்

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு தமிழ் பெண்களை வெள்ளை வானில் கடத்தி திருகோணமலை கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக சி ஐ டி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த மாதம் 5ம் திகதி கே.எச்.கீத்திக்கா சந்தமாலி. .எம்.அருணி தினிசா. ஆகிய இரு பெண் கடற்படையினரை சிஐடியினர் கைது செய்து திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

அதனை தொடர்ந்து கடற்படையினரான ஞானசேகரம் றொபட், பி..எச்.சந்திரசிறி எம்.வீ.கே.சமிந்த குமார. பீ.டபிள்யூ.எஸ்.ஞானக்குமார. ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் மேற்படி கடத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ,ஓய்வு பெற்ற கடற்படையின் நிர்வாகப் பிரதான கீழ்நிலை அதிகாரிகளான .எம்.எச்.அருண துசார மென்டிஸ். கே.சீ.சுரேக டி சில்வா, ஆர்.எம்.யூ.குமார ரத்நாயக்க. ஆகிய 3 பேரையும் 19ம் திகதி திங்கட்கிழமை (19) சிஜடி யினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் 20ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (20) திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன், முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் நவம்பர் 20 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இந்த கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பெண் கடற் படையினர் உட்பட 9 கடற்படையினரை சிஐடியினர் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் இந்தக் கைதுகள் மிகுந்த ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.