அ.தி.மு.க.வுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத்தெரியுமென ஆர்.பி.உதயகுமார் கூறினார்
Share
அ.தி.மு.க.வுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத்தெரியுமென ஆர்பி உதயகுமார் கூறினார். மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா, த.வெ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்கும்படி தன்னிடம் பேரம் பேசினார்கள் என்றும், ரூ.30 கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறினார் என்றும் ஒரு கதை விட்டு இருக்கிறார். அதேபோல் அமைச்சர் நிர்மல்குமாரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டுச்சதி செய்கிறது என்று முற்றிலும் ஆதாரமற்ற, அரசியல் உள் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இந்த அமைச்சர்தான் யூனிட் ரூ.37, ரூ.41.50 வீதம் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டவர். இதே நேரத்தில் கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50-க்கு வாங்கியிருக்கிறது. இந்த ஊழல்களை திசை திருப்புவதற்காக அ.தி.மு.க.வின் பெயரை தேவையின்றி இழுத்து பேசுவதை அமைச்சர் நிர்மல்குமாரும், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத்தெரியும். குறுக்குவழியில் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அரசியல் நாடகம் நடத்துவதை விட் டுவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













