ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் “பீல் மை லவ்” படத்தின் முன்னோட்டம் வெளியானது
Share
ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் “பீல் மை லவ்” படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘96’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரி பிரகாஷ் இயக்குகிறார். காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். ‘பீல் மை லவ்’ படத்தின் புதிய பதாகை சமீபத்தில் வெளியானது. ஹரி பிரகாஷ் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.













