LOADING

Type to search

ராசி பலன்

Share


ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர்
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்

40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204.

தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666

மேஷம் :

இந்த வாரம் எதிலும் சற்று பொறுமையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். தொலைதூரத்தில் இருந்து கிடைக்கும் செய்தி சற்று சஞ்சலப்படுத்தும் என்றாலும் பாதிப்பு இருக்காது. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். தந்தைவழியில் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணிகள் அதிகரிக்கும். பணிகளை முடிப்பதில் சில தடைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் தேவை. வயிறு சம்பந்தமான தொந்தரவு வரலாம். காரசாரமான உணவை தவிர்க்கவும். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கூடுதல் யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்

ரிஷபம்:

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். சக ஊழியர்களுக்கு பணிகளை முடிப்பதில் ஏற்படக்கூடிய சிற்சில தடைகளின் காரணமாக, அவர்களின் பணிகளையும் நீங்களே சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அதன் காரணமாக சற்று அசதி ஏற்படக்கூடும். புதிய முதலீடுகள் வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளின் காரணமாக சற்று சோர்வு ஏற்பட்டாலும் கணவரின் அன்பும் உற்சாகம் தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் அமையும் யோகம் வலுவாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் செலவுகளை மட்டும் கட்டுப்படுத்துங்கள். ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட்டால் கூடுதல் யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி

மிதுனம்:

வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாயாரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படுகிறது. பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். அதிகாரி மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தடைப்பட்ட சலுகை கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் திறமை அனைவராலும் பாராட்டப்படும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி

கடகம்:

பணவரவுக்குக் குறைவில்லை. அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும். அலுவலகப் பணிகள் அதிகரிக்கும். இருந்தாலும் பணிகளை முடிப்பதற்கேற்ற அவகாசமும் சலுகையும் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். வேலை பார்ப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் லாபம் தரும். பண வரவு அதிகரிக்கும். கடன் கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூக்கமின்மை, சளி போன்ற சிறிய தொந்தரவுகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நாள்: திங்கள், வியாழன்

சிம்மம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகிவிடும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும். உயர் பதவி, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் பல மடங்கு அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. அலுவலகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு உடனே வரன் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டால் கூடுதல் யோகம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, செவ்வாய்

கன்னி:

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரியின் ஆலோசனை உங்கள் பணியில் ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இருக்கும். சலுகை கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளுடன் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, போனஸ் போன்ற நல்ல செய்திகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறந்த நேரம் இது. பண வரவு சிறப்பாக இருக்கும். பழைய கடன் அடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி

துலாம்:

தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. வயிறு சம்பந்தமான தொந்தரவு வரலாம். வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு இந்த வாரம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் மூலம் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். கடன் பிரச்சனை முடிவுக்கு வரும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி

விருச்சிகம்:

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். ஆனாலும், செலவுகளும் குறைவாகவே இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக முக்கிய முடிவு ஒன்றை எடுக்க நேரிடும். பணிகளில் அலட்சியம் வேண்டாம். சிறு தவறும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்கவும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். சொத்து சம்பந்தமான பிரச்சனை முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்கள். வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய மாற்றம் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என அடுத்தடுத்து நல்ல செய்திகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு எதிரிகள் விலகுவார்கள். போட்டியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்

தனுசு: பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண் டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக சிலருக்கு வெளியில் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்வது அவசியம். சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களும் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் சுபகாரியம் நடக்கும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் பாராட்டு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் லாபம் தரும். பண வரவு சிறப்பாக இருக்கும். பழைய கடன் அடையும். வெளிநாட்டில் இருந்து நல்ல வாய்ப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நாள்: வியாழன், செவ்வாய்

மகரம்:

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகாரிகளால் காரியங்களில்
அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்னைக்கு உங்களுடைய அனுபவ அறிவு பயன்படும் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும் .பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். குடும்பத்தை நிர்வகிக்கும்
பெண்களுக்கு உற்சாகமான வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் ஏற்படாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி
தருவதாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு என அடுத்தடுத்து நல்ல செய்திகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம்
இரட்டிப்பாகும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, சளி போன்ற தொந்தரவு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நாள்: சனி, புதன்

கும்பம்:

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். அரசாங்க வகையில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் மாற்றம் வரும். நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய பதவி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்க சிறந்த நேரம். லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு உடனே வரன் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவசர முடிவுகளை மட்டும் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நாள்: சனி, வியாழன்

மீனம்:

பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பணவரவு திருப்தி தரும். வீண்செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் உதவி செய்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். வேலையைப் பொறுத்தவரை அதிகப்படியான பொறுப்புகளின் காரணமாக சற்று சோர்வு ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.. எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என அடுத்தடுத்து நல்ல செய்திகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் பல மடங்கு அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பழைய கடன் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன் அமையும்.மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டால் கூடுதல் யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நாள்: வியாழன், திங்கள்.