LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் தங்கச்சுரங்கத்தில் புகுந்த வெள்ளத்தில் 29 பேர் உயிரிழப்பு?

Share

இந்தோனேசியாவில் தங்கச்சுரங்கத்தில் வெள்ளம் புகுந்த சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் போகொர் பகுதியில் சட்டவிரோத தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மலைப்பகுதியில் அமைந்த அந்த தங்க சுரங்கத்தில் நேற்று முன் தினம் 29 பேர் தக்கத்தை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையால் மலைப்பகுதியில் பாயும் சிசிருவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் தங்கச்சுரங்கத்தில் புகுந்தது. இதனால், 29 பேரும் வெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தங்கச்சுரங்கத்திற்க்குள் சிக்கியவர்களை மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்திற்குள் சிக்கிய 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.