LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக ஆளுன அர்லேகரிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார்

Share

தமிழக ஆளுன அர்லேகரிடன் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழக ஆளுனர் அர்லேகரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு வருகை தந்தார். இந்த சந்திப்பின்போது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுனரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.