LOADING

Type to search

இந்திய அரசியல்

தொகுதி மறுவரையறை மசோதாவால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாதென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

Share

தொகுதி மறுவரையறை மசோதாவால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாதென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் எம்.பி.க்களின் எண்ணிக்கை நமக்குக் குறையாது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எடுத்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இதையெல்லாம் பாஜக தெளிவுபடுத்தி, பல அரசியல் கட்சிகளுக்குப் புரிய வைத்து, அதற்குப் பிறகு அவர்கள் வைத்த கோரிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும். 25 வருடத்திற்கு இது தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதனால்தான் பல கட்சிகள் தற்போது ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கிறது. திமுக மட்டுமில்லை. இந்தியாவில் பல கட்சிகள் ஆதரவு கொடுக்கிறது. இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. மொத்த நலன் கருதி எடுத்திருக்கக்கூடிய முடிவு இது. இல்லையென்றால் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் தமிழ்நாட்டிற்குத்தானே பாதிப்பு என்றார்.