தி.மு.க.வை நம் பக்கம் வைத்து கொள்ள வேண்டுமென “காங்கிரஸ் தலைமையிடம் அப்போவே சொன்னதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
Share
தி.மு.க.வை நம் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு முன்பே சுட்டிக்காட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே உள்ளது. ஆனால், இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள், குறிப்பாக திமுகவுடனான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி ஒருபோதும் இந்தியா அணியின் பகுதியாக இருந்ததில்லை. என்.சி.பி (எஸ்.சி.பி) மற்றும் திமுக, வெளிப்படையாக, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. சரத்பவாரின் என்.சி.பி மற்றும் மு.க. ஸ்டாலினின் திமுக, நாங்கள் ஏப்ரல் மாதம் எடுத்த நிலைப்பாட்டை ஆதரித்து, அதில் உறுதியாக இருக்கும் என்று நான் இன்னும் நம்புகிறேன். தி.மு.க.வுக்கு மக்களவையில் 22 இடங்கள் உள்ளன, மாநிலங்களவையிலும் குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. திமுகவை நம் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு முன்பே சுட்டிக்காட்டினேன். தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது சரியே. ஆனால் அதற்கு பிறகு நடந்த சில விஷயங்களால் திமுகவுடனான உறவு குலைந்துவிட்டது. சிலவற்றை கட்சிக்குள் மட்டுமே பேச முடியும். வெளியில் கூற முடியாது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.













