LOADING

Type to search

இந்திய அரசியல்

“தேர்தலை புறக்கணியுங்கள்” – வயநாடு மக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்

Share

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி  ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தபடி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டு மக்கிமாலா தேயிலை தோட்டப் பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் சென்றனர்.

இது தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோவில் இருந்த காட்சிகளை கொண்டு மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் பகிரங்க மிரட்டல் விடுத்ததன் காரணமாக வயநாடு தொகுதியில் பெரும்  பதற்றம் நிலவி வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பா... சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.