LOADING

Type to search

இந்திய அரசியல்

வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Share

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

      உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில்,  பொதுவாக எந்தவொரு தேர்தல் என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயருடன் கீழே நோட்டாவும் இருக்கும். வேட்பாளருக்கு பதிலாக நோட்டாவுக்கு வாக்களிப்பது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், நோட்டாவுக்கு 99.99% வாக்குகள் விழுந்து,  ஒரு வாக்கு எதாவது வேட்பாளர் பெற்றிருந்தாலும், அந்த வேட்பாளர் தான் வென்றவராக அறிவிக்கப்படுவார். இது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளரும் பேச்சாளருமான ஷிவ் கேரா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அதில்,  ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: “இது தேர்தல் நடைமுறை பற்றியது. இது குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்” என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.