LOADING

Type to search

உலக அரசியல்

ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

Share

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கொரோட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.

ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதுவே போருக்கான தொடக்கப்புள்ளி. இப்படி தொடங்கிய போர் ஓராண்டு கடந்த பின்னரும் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கொரோட்டில் ஆளில்லா விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் ரஷ்யாவை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்கியதாக கூறப்படுகிறது. பெல்கொரோட் பகுதியை தொடர்ச்சியாக உக்ரைன் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், இந்த தாக்குதல் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், இதில் ஒரு குழந்தையின் நிலை மோசமாக உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.