LOADING

Type to search

இந்திய அரசியல்

“ரசம் நமக்கெல்லாம் மருந்தானது எப்படி?” கவிஞர் வைரமுத்து விளக்கம்

Share

மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இதுபற்றி அவர் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:-

“கொரோனா காலத்தில் வீடுதேடி வந்து உணவுப்பொருள் தந்து உயிர்காத்த உத்தமர்கள் வணிகர்கள் என்றேன் அவர்கள் தந்த பொருளால் தயாரிக்கப்பட்ட ரசம் நமக்கெல்லாம் மருந்தானது என்றேன் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, மிளகாய், புளி, கடுகு என்பவை ரசத்தின் உள்ளீடுகள் சீரகத்தின் மெக்னீசியம் வயிற்றுச்சுவர்களை வலிமை செய்வது மிளகின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் புரதத்தை உடைத்துச் செரிப்பது பூண்டு கொழுப்பைச் சிதைத்துக் கரைப்பது தக்காளி மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது;

தோல்நலம் காப்பது மிளகாய் வைட்டமின் ஏ, சி இரண்டும் உடையது புளி வயிற்றுக் கோளாறு சரிசெய்து இருதயத்தின் வலிமை கூட்டுவது கடுகு எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க உதவுவது இப்படி ‘ரச’வாதம் செய்து மருத்துவர்கள் ஆனவர்கள் வணிகர்கள் அவர்தம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; பாதுகாப்பு உரிமையாக்கப்பட வேண்டும்” என்று பேசினேன் விக்கிரமராஜா கூட்டத்தாரின் கரவொலியின் பேரோசையில் கூடடைந்த பறவைகள் குலுங்கிச் சிறகடித்தன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.