LOADING

Type to search

சினிமா

ரூ.150 கோடி வசூலித்த ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம் – புதிய பதிவேற்றம்!

Share

பாசிலின் ஆவேசம் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான திரைப்படம் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது. இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல தரமான வரவேற்பு பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் 130 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது ஆவேசம். இதில், ரோஷன் ஷானவாஸ், மிதுன் ஜெய், ஷாஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பகத் பாசில் கதாநாயகனாக நடித்து 150 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் இதுவாகும். இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அமர்க்களமான ஹிட் அடித்தது ஆவேசம் திரைப்படம். ‘கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டுபவர்’ என்ற பெயரை பெற்ற பகத், இந்த படத்தில் தனது ஜாலி கலந்த வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் காமெடி வகையில் உருவான இந்த படத்தில், கதாநாயகியே இல்லை.

இதுவும், இந்த படத்தில் பாராட்டுதலுக்குரிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது. கேங்ஸ்டர் படமாக உருவாகியிந்த ஆவேசம் படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முக்கியமாக ஃபகத்தின் நடிப்பு வழக்கம்போல் அசத்தலாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது ஆவேசம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 9 ஆம் தேதி இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் படத்துக்கு ரசிகர்கள் செம வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக ஓடிடியிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவை படத்துக்கு கொடுப்பார்கள் என்று ஃபகத் பாசில் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.