LOADING

Type to search

இந்திய அரசியல்

தேதியில் மாற்றம்- வரும் 9ம் தேதி பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

Share

வரும் ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து நரேந்திர மோடியின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், டில்லியில் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே வரும் 8ம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதவி ஏற்பு விழா 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.