பெண்களின் உலகக் கோப்பை உதைப்பந்தாட்ட போட்டி- 2024 இன் இறுதிப் போட்டிக்கு தமிழ் ஈழம் பெண்கள் அணி தெரிவாகியுள்ளது.
Share
தற்போது நடைபெற்று வரும் பெண்களின் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டி- 2024 இன் இறுதிப் போட்டிக்கு தமிழ் ஈழம் பெண்கள்அணி; தெரிவாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்துள்ளோம்.
இந்த முறை வடக்கு நோர்வேயின் போடோவில் உள்ள ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள .
போடோ வட துருவத்திற்கு தெற்கே 1,500 மைல் தொலைவில் அமைந்துள்ள நகரத்தில் இந்தப்; போட்டிகள் நடைபெறுகின்றன
தமிழீழ பெண்கள் அணி செப்மீ தேசத்தின் பெண்கள் அணியோடு மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஜூன் 8, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (நோர்வே நேரம்) நடைபெற்று பின்னர் விருதுகள் மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கும் வைபவம் மாலை 4 மணிக்கு (நோர்வே நேரம்) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கொனிஃபாவின் மகளிர் உலக உலக உதைப்பந்தாட்டப் போட்டியில் தமிழ் ஈழம் பெண்களின் அணி முதல் தடவையாக பங்கேற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எமது தாய் மண்ணை அடையாளப்படுத்தும் தமிழ் ஈழம் மகளிர் கால்பந்து உதைப்ந்தாட்ட அணியில் நோர்வே, இங்கிலாந்து, சுவிஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளில் வசிக்கும் தமிழ் ஈழம்த்தை பிரதிநிதித்துவம் செய்யும் பெண் வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மெலனி சுரேஸ்குமார் என்னும் கனடிய பல்கலைக்கழக மாணவியும் விளையாடுகின்றார் என்பதும் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் 2022ம் ஆண்டிற்கான ‘இளையோர் அடையாள விருது’ பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது