LOADING

Type to search

உலக அரசியல்

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் மரணம்

Share

கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலாவி துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது. லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது. மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மலாவியின் துணை அதிபர் மற்றும் அவருடன் பயணம் செய்த 9 பெரும் விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.