விடுதியின் சுவரேறி குதிக்கும் அரசியல்வாதிகள்
Share
தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஐ.ஜே.கே. கட்சித் தலைவருக்கு சொந்தமான ‘SRM’ நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி 30ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது.ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் விடுதிக்கு நேரில் வந்து விடுதியை காலி செய்யுமாறு தெரிவித்தனர். தொடர்ந்து விடுதியை காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும், விடுதி நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விடுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அதிகாரி கூறியதை அறிந்த பாஜகவினர் மற்றும் ஐஜேகே கட்சியினர் அங்கு குவிந்து கெட் பூட்டி உள்ளதால் அருகில் உள்ள சுவர்கள் மீது ஏறி குதித்து விடுதிக்குள் வந்தனர். இதனால் இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்