LOADING

Type to search

இந்திய அரசியல்

‘மதச்சார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்’ ராகுல் காந்திக்கு பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து

Share

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடினார் . இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல்காந்தி தனது பிறந்தநாளை அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் அவரை வாழ்த்தினர்.

.இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதச்சார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் இடைவிடாத போராட்டமும், பயணமும் தொடர வாழ்த்துகிறேன். உங்களது ‘அன்பின் கடை’ மேலும் பலம் பெறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

=