LOADING

Type to search

சினிமா

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பதாகை வெளியீடு!

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில்,  ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பதாகை வெளியாகி உள்ளது.