LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு – ஜெர்மனி காவல்துறை விசாரணை

Share

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள அருங்காட்சியகம் அருகே இ்ஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தன் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் சுற்றித்திரிந்தார். எனவே சந்தேகத்தின்பேரில் காவல்துறை அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த முயன்றனர். அப்போது அவர் காவலரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதற்கு பதிலடியாக காவலர் அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: முனிச் நகரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞா் காவலரை நோக்கி சுட்டார். அதையடுத்து, காவல்துறை திருப்பிச் சுட்டதில் அவா் உயிரிழந்தார். 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரா்களும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினரும் சுட்டுக் கொல்லப்பட்ட 52-ஆவது ஆண்டு தினத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அந்த இளைஞா் துப்பாக்கியுடன் அங்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா். இது குறித்து செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சர் ஜோவாசிம் ஹொமன் கூறுகையில், ‘இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே ஒருவா் காரை நிறுத்துகிறார்; பிறகு துப்பாக்கியால் சுடுகிறார் என்றால் அது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது’ என்றார்.