(13-01-2022) இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(13-01-2022) 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, களு துஷார என்ற ...
(13-01-2022) பொரளையில் உள்ள தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெப்பமடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்க பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ...