07-10-2021 பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ...
(07-10-2021) பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று (06) இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது ...
(07-10-2021) மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ ...