வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி (university college) மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமானது. (Tectopia) ரெக்டோபியா – 2023 எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கண்காட்சி நாளைய தினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்மாவட்ட்அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.