டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. அரசின் நடவடிக்கையால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிகள் அதிகரித்துள்ளது. காவேரி பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் வைக்கப்பட்ட பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சப்பட்டதால், அப்பள்ளி கட்டடம் இடிக்கும்பணி நடந்து வருகிறது. அங்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 288 ...