ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடித்தது
Share
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடித்தது. ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணம் அஸ்லதாபாத் பகுதியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மதியம் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், அந்த பள்ளியில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













