பிரபல மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் உயிரிழந்தார்
Share
பிரபல மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் உயிரிழந்தார். பிரபல மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட். இவர் கடந்த நவம்பர் 7-ம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ‘கிரவுன் ஜுவல்’ போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியின்போது பிரான்சன் ரீட், மேடையிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு விலா எலும்புகள் முறிவு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அமெரிக்கா திரும்பினார். பிறகு மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தநிலையில், தற்போது உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.













