கராச்சி பல்கலைக்கழகத்தில் மதியம் 1:52 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகிறது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெடி விபத்துக்குள்ளான வேனில் ஏழு முதல் எட்டு பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வேன் மீது வாகனம் ஒன்று மோதியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ...
மறைந்த மலையக எழுத்தாளர் சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவல் வெளியீடு லண்டனில் சென்ற சனிக்கிழமை (16.4.22) விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை நூலகம் வலைத்தளத்தின் நிறுவனர் இ.பத்மநாப ஐயர் பெற்றுக்கொண்டார். ‘கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’, ...
ரஷிய போர்க்கப்பல் மூழ்கியபோதே 3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது” என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது. கருங்கடலில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வாவில் வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷிய ...