லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. ...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, கடந்த வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்கும் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புரூக்ளின் ...