LOADING

Type to search

இந்திய அரசியல்

சிதம்பரம் நடராஜர் ஆலய வளாகத்துக்குள் தீட்சதர்கள் மட்டை பந்தாட்ட விளையாட்டு – தட்டிக் கேட்ட நிர்வாகியை அடித்து உதைத்த தீட்சதர்கள்

Share

சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடுவதை அவரது கைபேசியில்

படம் எடுத்துள்ளார். அப்போது தீட்சிதர்கள் காணொளி எடுத்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உடனே விசிக நிர்வாகி இளையராஜா கோவில் உள்ள மட்டை பந்தாட்டம் விளையாடலாமா என்றும், இது ஆகம விதிவிலக்கு எதிரானது தானே என்றும் கேட்டுள்ளார். மேலும் இதேபோல அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா என கேட்டதற்கு, தீட்சிதர்கள் இது “எங்க கோவில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம்” அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் பேசியுள்ளனர்.

அது மட்டுமல்லாது இளையராஜாவை அடித்து அவரது கைபேசியை பறித்துள்ளனர். ஆகவே இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவின் செல்போனை பறித்து தீட்சிதர்கள் அவரை மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய போது பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம்

விளையாடியது எந்த தவறும் இல்லை என்றும், கோவில் கருவரையில் விளையாடினால் தான் தவறு என்றும் தெரிவித்துள்ளார். இதில் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.