LOADING

Type to search

இந்திய அரசியல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமாக ராவணன் குடில் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் சென்னை சின்ன போருர் பகுதியில் அமைந்துள்ளது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் அக்கட்சியின் நிர்வாகி பாக்கியாஜன் பெயரில் உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், பின்னர் அந்த இடம் பாக்கியராஜன் பெயரில் இருப்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர் தனது வீட்டை அடமானம் வைத்து, நிலத்தை வாங்கியதால் அந்த இடம் அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகம் வங்க வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து ஒன்றரை கோடி வசூலித்த நிலையில், அந்த பணம் என்ன ஆனது என கேள்வி எழுந்துள்ளது. மேலும் இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள அதிர்ச்சி தகவல் தறபோது வெளியாகியுள்ளது. ராவணன் குடில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரான பிரசாத், முதலில் அந்த இடத்தை நாம் தமிழர் கட்சியினருக்கு லீசுக்கு வழங்கியுள்ளார். பின்னர் தனது தேவைக்காக நிலத்தின் பட்டாவை வங்கியில் ஒன்றைரை கோடி ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுக்கு அவர் முறையாக வட்டி செலுத்தாததாக தெரிகிறது. இதனை அடுத்து, அந்த நிலத்தை ஜப்தி செய்வதற்காக சென்றபோது, நாம் தமிழர் கட்சியினர் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். பின்னர் நிலத்தின் உரிமையாளரிடம் கடன் தொகையை நாம் தமிழர் கட்சி வழங்குவதாகவும், வங்கியில் இருந்து பத்திரத்தை மீட்டு கட்சிக்கு எழுதி தருமாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

கட்சி அலுவலகம் வாங்குவதற்காக வெளி நாடுகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து ரூ.1.50 கோடி வசூலித்து நில உரிமையாளர் பிரசாத்திடம் அளிக்கப்பட்டது. ஆனால் பிரசாத் வங்கியில் பணத்தை கட்டி பத்திரத்தை மீட்டு தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து, நாம் தமிழர் நிர்வாகிகள் பாக்கியராஜன், மறைந்த தடா சந்திரசேகர் ஆகியோர் பிரசாத்தை பிடித்து ரூ.1.50 கோடி மீட்டுள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 60 லட்சம் மட்டுமே திரும்ப பெறப்பட்டதாக கூறி அளித்துள்ளனர். எஞ்சிய தொகையை அவர்களே பங்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர் பிரசாத், வெங்கடேஷ் என்பரது பெயருக்கு பட்டாவை மாற்றியுள்ளார். வெங்கடேஷ் நிலத்தை அடகுவைத்தபோது முறையாக வட்டி செலுத்தாதால் வங்கி ஏலத்திற்கு வந்தபோது, பாக்கியராஜன் தனது வீட்டை அடகு வைத்து நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில், கட்சி அலுவலகம் வாங்க வெளிநாடுகளில் உள்ள கட்சியினர் வழங்கிய நிதி என்ன ஆனது என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.