LOADING

Type to search

இந்திய அரசியல்

வயநாடு இடைத்தேர்தல்- பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார்

Share

நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.