ஸ்பெயின் நாட்டில் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்வு
Share
ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஸ்பெயினில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை நீரில் மூழ்கடித்தது. சுமார் 5 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்து சேறும், சகதியுமாக ஆனதால் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி மட்டும் நேற்று முன்தினம் 51 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்தன. இதில் மேலும் 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வலென்சியாவில் குறைந்தது 92 பேர் உயிரிழந்துள்ளனர். வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு உயிரிழப்புகளும், மலாகாவில் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.