LOADING

Type to search

உலக அரசியல்

போட்ஸ்வானாவில் புதிய அதிபராக டுமா பொகோ பதவியேற்பு

Share

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு போட்ஸ்வானா. உலகில் அதிக வைர சுரங்கங்கள் இந்நாட்டில்தான் அமைந்துள்ளது. உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் போட்ஸ்வான உள்ளது.

இதனிடையே, போட்ஸ்வானா 1966ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்நாட்டை போட்ஸ்வானா ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் அதிபராக மொக்வெஸ்டி மசிசி செயல்பட்டு வந்தார். அதேவேளை, அந்நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் மொக்வெஸ்டி மசிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக மாற்றத்திற்கான குடை என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து டுமா பொகோ தலைமையில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் டுமா பொகோ தலைமையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் போட்ஸ்வானாவில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து போட்ஸ்வானா நாட்டின் புதிய அதிபராக டுமா பொகோ பதவியேற்றுள்ளார். போட்ஸ்வானாவின் 6வது அதிபராக டுமா பொகோ பதவியேற்றுக்கொண்டார். டுமா பொகோவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிபிரமாணம் செய்துவைத்தார்.