லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குல் – 52 பேர் பலி
Share
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த ஓர் ஆண்டாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் போர் காரணமாக காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் உயிருக்கு பயந்து தங்கள் வீடு, உடைமைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செவி சாய்க்க மறுக்கும் இஸ்ரேல் தாக்குதல்களை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இந்த கொடூர தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 72 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.