LOADING

Type to search

இந்திய அரசியல்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு – கேரள அரசு அறிவிப்பு!

Share

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.

     சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.