LOADING

Type to search

இந்திய அரசியல்

உத்தரகாண்ட் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 28 பேர் உயிரிழப்பு

Share

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை 9 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கவும் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அல்மோரோ எஸ்.பி. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது. சால்ட் துணை மாவட்ட கலெக்டர், சில பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் “பேருந்து விபத்து ஏற்பட்ட 28 பேர் உயிரிழந்தது செய்தி மிகவும் கவலையளிக்கும் செய்தி. துரித மீட்புப்பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.