ஹமாஸ் பணய கைதிகளில் 51 பேர் உயிருடன் இருக்கலாம் – அதிர்ச்சி தகவல்
Share
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஹமாஸ் கடத்திச்சென்ற பணய கைதிகளில் 51 பேர் உயிருடன் இருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய உளவு தகவல்களின் அடிப்படையில் பணய கைதிகளில் 51 பேர் ஹமாஸ் வசம் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.