கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்
Share
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து காலை 9.40 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் வந்தார். சுற்றுலா மாளிகை வாசலில் தி.மு.க. வக்கீல்கள் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.