சூடான் வெள்ளத்திற்கு 14 லட்சம் பேர் பாதிப்பு – ஐ.நா. அறிவிப்பு
Share
ஐ.நா. அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, தெற்கு சூடான் மற்றும் சூடானுக்கு உட்பட்ட அபை நிர்வாக பகுதி மற்றும் 43 நாடுகளை சேர்ந்த 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், ஜாங்லெய் மற்றும் வடக்கு பாஹ்ர் எல் கஜல் மாகாணங்கள் 51 சதவீதம் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 22 நாடுகள் மற்றும் அபை பகுதியை சேர்ந்த 3.79 லட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், மலேரியா பாதிப்பும் அதிகரித்து உள்ளது. வெள்ளத்தினால், வீடுகள் சேதமடைந்து உள்ளன. கால்நடைகளும், பயிர்களும் பாதிப்படைந்து உள்ளன. பருவநிலை மாற்றம் விளைவாக தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமடைந்து உள்ளது. 2021-ம் ஆண்டில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒவ்வோர் ஆண்டும் வெள்ள பாதிப்புக்கு 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கின்றது.