பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – ஜெயக்குமார்
Share
பாஜகவுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார். பா .ஜ.க.வுடன் தி.மு.க.தான் மறைமுக கூட்டணியில் உள்ளது.
பா.ஜ.க.வுடன் மறைமுக ஒப்பந்தத்துடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. திருச்சி சிவா நடத்திய பார்ட்டி நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அமைச்சராக இருந்தபோதே பிரதமரை உதயநிதி எப்படி சந்திக்க முடிந்தது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சரை அழைத்தனர்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது” என்று அவர் தெரிவித்திருந்தார்.