LOADING

Type to search

இந்திய அரசியல்

நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்

Share

தமிழ் திரை உலகில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்தவர் டெல்லி கணேஷ் (வயது 80). குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இதைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து டெல்லி கணேசின் இறுதி சடங்கு காலை 11 மணிக்கு நடந்தது. அவரது மகன் மகா டெல்லி கணேஷ் மற்றும் குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர்.  ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து டெல்லி கணேஷ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  முன்னதாக அவரது உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், சூரி, பிரபுதேவா, செந்தில், முத்துக்காளை, கிங்காங், இயக்குனர் வெற்றி மாறன், வசந்த் லிங்குசாமி, நடிகைகள் தேவயானி, பசி சத்யா, சச்சு உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வரும் முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார். அவரது மறைவையொட்டி விமானப் படை வீரர்கள் இன்று காலை டெல்லி கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.