LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க அமைச்சரவையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

Share

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள். இந்நிலையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை  வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.