ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
Share
கோவை, துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரி, ஆதவ் ஆர்ஜுனா வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நேற்று (நவ.,14) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று (நவ.,15) 2வது நாளாக, கோவையின் வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, மார்ட்டினின் மகன் வீடு மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாளரும், அவரின் மருமகனுமான ஆதவ் ஆர்ஜுனா வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. 2வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.