நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு
Share
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சம்மன் கொடுக்க சென்றபோது அவர் தலைமறைவானார். பின்னர் அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று கூறிய நீதிபதி தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி அவதூறாக பேசியதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படையை காவல்துறை அமைத்த நிலையில் நேற்று அவரை ஹைதராபாத்தில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நடிகை கஸ்தூரி விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறை அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தனது குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை எனவும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.