நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் தாக்குதல் – 50 போராளிகள் பலி
Share
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பொர்னோ மாகாணத்தில் பாதுகாப்புப்படையினர் ரோந்து பணிகு சென்ற வாகனங்களை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் 50 போராளிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலின்போது பாதுகாப்புப்படையை சேர்ந்த 7 வீரர்களை போராளிகள் கடத்திச்சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட பாதுகாப்புப்படையினரை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.