LOADING

Type to search

உலக அரசியல்

உருகுவே அதிபர் தேர்தல் – எதிர்க்கட்சி யமண்டூ ஓர்சி வெற்றி

Share

தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அதிபர் லூயிஸ் லக்கால் போவின் (வயது 51) பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அல்வாரோ டெல்கடோ களமிறங்கினார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் யமண்டூ ஓர்சி (57) போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.இந்தநிலையில் யமண்டு ஓர்சி 49.8 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டெல்கடோ 45.9 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார்.