LOADING

Type to search

இந்திய அரசியல்

“இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்” – மம்தா பானர்ஜி பேட்டி

Share

இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரஸை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்னைகளும் இருந்து வந்தன. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார்.இந்நிலையில், தற்போது இந்தியா கூட்டணிக்குத் தலையேற்கத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, “நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் [எதிர்க்கட்சித் தலைவர்கள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கவில்லை. கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்கத் தயார். நான் மேற்கு வங்கத்துக்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் மேற்கு வங்கத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும். பலவீனமான நிர்வாகத்தின் கீழ் செழித்து வளரும் மாபியா கும்பலால் வங்கதேசம் தலைமை அற்றதாக விளங்குகிறது. மேற்கு வங்க எல்லையில் ஒருவர் தீயை பற்ற வைத்தால் அது பீகார், ஒடிசா மாநிலம் வரை பரவி விடுகிறது. பக்கத்து நாடுகளில் வசிக் கும் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன். மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு வசிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.