LOADING

Type to search

இந்திய அரசியல்

“2025-டிசம்பரில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு” – அமைச்சர் சேகர்பாபு

Share

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 63 பணிகள் நடைபெறுகிறது. அதில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடைபெறுகிறது. கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018-ல் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கற்கள் பெற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. 25 அடி நீளம் கொண்ட கல்லை பெறுவதற்காக ரூ.19 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்” என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.